மனித ஆற்றல் தரவரிசை: பின்லாந்து முதல் இடம்

0
172

201606290259197490_India-slips-5-notches-to-105th-on-Human-Capital-Index_SECVPFமனித ஆற்றலை உருவாக்கி, வளர்த்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது, இந்தியா பின்தங்கி, 105-வது இடத்தில் உள்ளது.

சீனாவின் தியான்ஜின் நகரத்தில் உலகப் பொருளாதார அமைப்பின் ஆண்டுக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் பொருளாதார வளர்ச்சிக்காக மனிதர்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ளுதல், ஒட்டுமொத்த வளர்ச்சி அடைய நாடுகளின் திறமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மனித ஆற்றல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

மொத்தம் 130 நாடுகளிடையே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், பொருளாதார வளர்ச்சிக்கு மனித வளத்தை அதிக அளவில் (85 சதவீதம்) பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளில் முதல் இடத்தை பின்லாந்து பிடித்துள்ளது. நார்வே இரண்டாம் இடத்தையும், அதற்கடுத்த இடங்களை ஸ்விட்சர்லாந்து, ஜப்பான், ஸ்வீடன், நியூஸிலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, கனடா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளும் பிடித்து, இப்பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளன.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 100-ஆவது இடத்தைப் பிடித்த இந்தியா, இந்த ஆண்டு 105-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இந்தியா 57 சதவீத அளவுக்கு மட்டுமே மனித ஆற்றலைப் பயன்படுத்தியுள்ளதாக உலகப் பொருளாதார அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் கூறப்பட்டது.

LEAVE A REPLY