அரச பாடசாலை மற்றும் மார்க்க ஆசிரியைகளுக்கான அனர்த்த நிவாரணப் பொதிகள் வினியோகம்

0
161

(அஸீம் முகம்மது)

bf59edf2-476e-4351-a122-24587aa36c88பாரிய வெள்ள அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட அரச பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியைகள் மற்றும் மார்க்கக் கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியைகளுக்கான விசேட நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு கொழும்பு பாத்திமா மகளிர் கல்லூரியில் கடந்த 23.06.2016ம் திகதி இடம் பெற்றது.

IBA அமைப்பின் செயலாளரும் ஜம்இய்யதுல் உலமாவின் கல்வி வளவாளருமான சகோ. நமீஸ், ACJU இணைப்பாளர் சகோ. அஷ்கர் கான், முஸ்லிம் எய்ட் பணிப்பாளர் சகோ. பைசர் கான் ஆகியோர் பங்கேற்றனர்.

‘தொழில்களுக்கு கௌரவமாகத் திரும்புவோம்’ என்ற தொணிப்பொருளின் கீழ் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பொதி வினியோகத்தின் இரண்டாம் கட்டம் இதுவாகும். பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான நிவாரணப் பொதிகள் வினியோகம் சென்ற 16ம் திகதி இடம் பெற்றது.

teachers

LEAVE A REPLY