தேசிய பட்டியல் எம்.பி. பதவி இராஜினாமாவா: இராஜாங்க அமைச்சர் பௌஸி நிராகரிப்பு

0
181

M.H.M.-Fowzieதேசிய பட்டியல் எம்.பி. பதவியை தான் இராஜினாமாச் செய்யப் போவதாக தெரிவிக்கப்படும் தகவலை சுதந்திரக் கட்சி உபதலைவரும் இராஜாங்க அமைச்சருமான ஏ. எச். எம். பௌசி நேற்று நிராகரித்தார்.

தனது எம்.பி. பதவியை அவர் இராஜினாமா செய்யப்போவதாகவும் அந்த வெற்றிடத்திற்கு முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ. எல். எம். அதாவுல்லா நியமிக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

இது தொடர்பில் வினவியதற்குப் பதிலளித்த அமைச்சர்,

தன்னிடம் எம்.பி. பதவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதியோ வேறு யாருமோ கோரவில்லை எனவும் ஊகங்களின் அடிப்படையில் இவ்வாறு வதந்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கட்சியில் சிரேஷ்ட உறுப்பினரான தன்னை ஜனாதிபதி நியமித்ததாக கூறிய அவர், தான் தொடர்ந்து கட்சியின் மேம்பாட்டுக்காகப் பாடுபடப் போவதாகவும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக ஐ.ம.சு.முவை பலப்படுத்துவதற்காக ஏ. எல். எம். அதாவுல்லாவை தேசிய பட்டியலினூடாக நியமிக்க சு. க. தயாராவதாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#Thinakaran

LEAVE A REPLY