மீன்பிடிக்கச் சென்ற பதுர்தீன் கடலில் மூழ்கி வபாத்; பூநொச்சிமுனையில் சோகம்

0
171

(அபூ ஷஹ்மா)

water death காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் நீரில் விழுந்து வபாத்தாகியுள்ளார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இன்று (28) பி.ப. 4.00 மணியலவில் மட்டு-பூநொச்சிமுனை கடற்கரையிலிருந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற 3 பிள்ளைகளின் தந்தையான முகம்மது பதுர்தீன் (38) என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார்.

ஜனாஸாவைத் தேடும் பனிகள் இடம்பெற்று வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY