காற்று மாசுபடுவதால், ஆண்டுக்கு 65 லட்சம் பேர் மரணம்

0
144

201606281617257851_Air-pollution-65-lakh-deaths-per-year_SECVPFசர்வதேச எரிசக்தி ஏஜென்சி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன்-டை-ஆக்சைடு காரணமாக காற்று மாசுபடுகிறது.

அதனால் ஏற்படும் நோய்களால் சர்வதேச அளவில் ஆண்டுக்கு 65 லட்சம் பேர் மரணம் அடைகின்றனர். அவற்றில் வீட்டிற்குள் ஏற்படும் காற்று மாசினால் 35 லட்சம் பேரும், வெளிகாற்று மாசுபடுவதால் 30 லட்சம் பேரும் அதில் அடங்குவர்.

அதே நேரத்தில் காற்று மாசுபடுவதால் சர்வதேச அளவில் ஏற்படும் உயிரிழப்பில் பாதி அளவு இந்தியா மற்றும் சீனாவில் ஏற்படுகிறது.

இந்தியாவில் ஆண்டுக்கு 16 லட்சம் பேர் பலியாகின்றனர். சீனாவில் 22 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவை தவிர இந்தோனேசியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, மற்றும் மெக்சிகோவில் காற்று மாசினால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இதற்கிடையே தற்போதைய நிலை தொடர்ந்தால், காற்று மாசுபடுவதால் சர்வதேச அளவில் ஆண்டொன்றுக்கு 75 லட்சம் பேர் பலியாவார்கள். இந்தியாவில் மட்டும் 17 லட்சம் பேரும், சீனாவில் 25 லட்சம் பேரும் மரணம் அடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY