காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 656 போசாக்கு குறைவான குடும்பங்கள்

0
100

(விஷேட நிருபர்)

64c5d26f-a273-41f2-9c17-5c5e7b949d7fகாத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் போசாக்கு குறைவான குடும்பங்களாக 656 குடும்பங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம்.சிவராசா தெரிவித்தார்.

இன்று(28.6.2016) செவ்வாய்க்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற போசாக்கு தொடர்பான பல் துறைசார் செயற்பாட்டு திட்டம் தொடர்பான கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் சுகாதார அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் மேற் கொண்ட ஆய்வின் அடிப்படையில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் போசாக்கு குறைவான குடும்பங்களாக 656 குடும்பங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

இவற்றில் ஐந்து வயதுக்கும் குறைந்த 223 குழைந்தைகள் போசாக்கற்ற குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு 433 குடும்பங்கள் போசாக்கற்ற குடும்பங்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த ஆய்வு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் மேற் கொள்ளப்பட்டது.

இந்த போசாக்கு குறைந்த குடும்பங்களில் 316 குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டும் , குறைவான போசக்கு உணவை உட்கொள்ளும் 311 குடும்பங்களும், தொற்றா நோயினால் 2 குடும்பங்களும், பராமரிப்பு குறைந்த 21 குடும்பங்களும், உணவு பாதுகாப்பில்லாத 6 குடும்பங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதைவிடவும் இன்னும் அதிகமான குடும்பங்கள் போசாக்கு குறைந்த குடும்பங்களாக இருக்கலாம் அவைகள் தொடர்பிலும் ஆய்வுகள் மேற் கொள்ளப்படவேண்டும்.

இந்த குடும்பங்களை போசாக்குள்ள குடும்பங்களாக மாற்றுவதற்கு நாம் மேற் கொள்ள திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்களுக்காக 34.63மில்லியன் ரூபா நிதி தேவைப்படுகின்றது.

ஜனாதிபதியினால் கடந்த 2015ம் ஆண்டு இந்த போசாக்கு தொடர்பான பல் துறைசார் செயற்பாட்டு திட்டம் நாடுபூராவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

போசாக்கு குறை;நத குடும்பங்களை போசாக்குள்ள குடும்பங்களாக மாற்றும் ஜனாதிபதியின் இந்த விஷேட வேலைத்திட்டம் சிறப்பாக மேற்கொள்ளப்படல் வேண்டும். இதற்காக சகல தரப்பும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

இந்த திட்டமானது ஒவ்வொரு கிராம மட்டத்திலும் பிரதேச செயலகப்பிரிவு மட்டத்திலும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக கிராம மற்றும் பிரதேச செயலக மற்றும் மாவட்ட மட்டத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தினூடாக போசாக்கு ஆபத்திலுள்ள குடும்பங்கள் அடையாளம் கானுதல் மற்றும் அந்த குடும்பங்களின் தகவல்களை கிராமி மட்டத்தினூடாக திரட்டுதல் என்பன போன்ற செயற்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் இத்திட்டத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.ஜாபீர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY