மட்டக்களப்பில் 1355 மில்லியன் செலவில் மீள் குடியேற்ற வேலைத்திட்டம்

0
124

(விசேட நிருபர்)

e346e8fe-8b34-41a4-ba54-a028d509929cசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வழிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மீள்குடியேற்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக்கூட்டம் திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்ட செலயகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் (27) நடைபெற்றது.

இவ் மீளாய்வுக் கூட்டத்தில் மாவட்டத்திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதேச செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், உள்ளுராட்டசி உதவி ஆணையளார், உள்ளுராட்சி சபைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில், புதிய வீடமைப்புத் திட்டங்கள், வீடமைப்புத் திருத்தம், மலசலகூட வசதிகளை ஏற்படுத்தல், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3932 அபிவிருத்தித்திட்டங்களுக்காக 1355 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் 1000 புதிய வீடமைப்புத் திட்டங்கள் 800 மில்லியன் ரூபா செலவிலும், 726 வீடமைப்புத் திருத்தங்கள் 145.33 மில்லியன் செலவிலும், 1000 மலசலகூட வசதிகளை ஏற்படுத்துவதற்கு 55 மில்லியனும், 34 உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதவதற்காக 154.67 மில்லியனும், 1164 வாழ்வாதார உதவிச் செயற்திட்டங்களுக்காக 100 மில்லியனும், 08 குடிநீர் விநியோகத்திட்டங்களுக்காக 100 மில்லியனும் செவலிடப்படவுள்ளன.

இத்திட்டங்களில் வசதி வழங்குனர்களாக புதிய வீடமைப்புகளுக்கு உள்ளுராட்சி சபைகள், மலசல கூடங்களை அமைப்பதற்கு சுகாதார வைத்திய அதிகாரிகளும், குடிநீர் விநியோகங்களுக்கு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையும், வீடமைப்புத்திருத்தங்கள் குறித்த விடயங்களுக்கு பிரதேச செயலாளர்களும் செயற்படுகின்றனர்.

இக் கூட்டத்தில் நடைபெற்றுவருகின்ற, ஆரம்பிக்கப்பட்டுள்ள, மீள்குடியேற்றம் தொடர்பான அனைத்துத்திட்டங்களினது செயற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டு துரிதமாக இவ் அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அரசாங்க அதிபரால் செயலாளர்கள், சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

035567fe-f759-4bb8-8a70-d8db56fb7612

87602347-c3ee-47ee-a98b-db2b84388c02

d6d8d5a6-cc6c-4703-b5b7-9575f7577846

e346e8fe-8b34-41a4-ba54-a028d509929c

LEAVE A REPLY