குவைட் சிற்றி விவகாரம்: காத்தான்குடி சம்மேளன முக்கியஸ்தர்கள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அதிரடி விசாரணை

0
145

(விசேட நிருபர்) 

KKY Federation Sammelanamஇலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் திங்கள் (26) மற்றும் செவ்வாய் (27) ஆகிய தினங்களில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன முக்கியஸ்தர்களை விசாரணை செய்துள்ளனர்.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள குவைட் சிற்றி எனப்படும் வீட்டுத்திட்டத்திற்கான காணி கொள்வனவு தொடர்பிலேயே இந்த விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வைத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் சம்மேளன தலைவர் மற்றும் செயலாளர் உட்பட அதன் உப தலைவர் ஆகியோரிடத்தில் விசாரணை செய்ததாகவும் தெரியவருகின்றது.

2004ம் ஆண்டு இடம் பெற்ற சுனாமி அனர்தத்தினால் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள குவைட் சிற்றி எனப்படும் வீட்டுத்திட்டத்தில் 70 வீடுகள் குவைத் நாட்டின் நிதியனுசரணையுடன் 2007ம் ஆண்டு நிர்மானிக்கப்பட்டது.

இதன் ஒவ்வொரு வீடும் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியில் நிர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வீட்டுத்திட்டத்தினை நிர்மானிப்பற்கான காணியினை கொள்வனவு செய்வதற்காக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் சேகரிக்கப்பட்ட நிதியினை இந்த வீடுகளை நிர்மானித்த அரசியல் தரப்பினரிடம் வழங்கியதாக தெரியவருகின்றது. அந்த நிதி தொடர்பிலேயே விசாரணைகள் இடம் பெற்றதாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY