பிரசாந்தனுக்கு எதிர் வரும் 12.7.2016 வரை விளக்க மறியல் நீடிப்பு

0
141

(விசேட நிருபர்)

50cea86f-acd2-4178-98a3-e9b3da01e381தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோருக்கான விளக்க மறியல் எதிர் வரும் 12.07.2016 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு காத்தான்குடி பெரிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேக நபர்களான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரான பூபாலபிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோரை எதிர்வரும் 12.7.2016 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா செவ்வாய்க்கிழமை(28.6.2016) இன்று உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதி இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY