கொலம்பியாவில் ஹெலிகாப்டர் விபத்து: 17 பாதுகாப்பு படை வீரர்கள் பலி

0
220

1கொலம்பியாவில் பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 17 பாதுகாப்பு படை வீரர்கள் பலியானார்கள்.

கொலம்பியாவில் சாகோ பகுதியிலிருந்து புறப்பட்டுச் சென்ற எம்ஐ-17 என்ற பாதுகாப்பு படைக்கு சொந்தமான அந்த ஹெலிகாப்டர் ஆன்டீயன் வனப்பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பாதுகாப்பு படை வீரர்கள் பலியானார்கள். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புபடையினர், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மோசமான வானிலையே ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கொலம்பிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே விபத்து குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அதிபர் சாண்டோஸ் உத்தரவிட்டுள்ளார். கொலம்பியாவில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில், 16 போலீஸார் உயிரிழந்தது குறிப்பிட்டத்தக்கது.

LEAVE A REPLY