அட்டாளைச்சேனை பிரதான வீதியில் விபத்து: றிஸ்வி ரயீஸ் வபாத்

0
155

(சப்னி)

13511010_246836305702567_8015922942960190892_n

அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பிரதான வீதியில் இன்று (28) நண்பகல் 12.20 மணியளவில் இடம் பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிர் இழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

உயிர் இழந்தவர் றிஸ்வி ரயிஸ் (18 வயது) என்பவர் கொழும்பு -12 ஐச்சேர்ந்தவர் எனவும் அண்மைக்காலமாக அட்டாளைச்சேனையில் தாய் தந்தையுடன் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞன் அட்டாளைச்சேனை சந்தை பகுதியில் இருந்து பிரதான வீதியால் மீனோடைக்கட்டு பிரதேசத்திலுள்ள தனது வீட்டிற்கு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் வந்த டிப்பர் லொறி மோதியதில் பலத்த காயத்திற்குள்ளாகி உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இச்சம்பவம் தொடர்பாக டிப்பர் அக்கரைப்பற்று பொலிசார் லொறி சாரதியை கைது செய்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருவதாகவும் தெரிவித்தனர்.

உயிர் இழந்தவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

13533102_246836212369243_6022568922975660607_n

13565505_1062084480523678_905377150_n

LEAVE A REPLY