ரமழான் கால இறுதிக்குள் இலவச குடிநீர் இணைப்புக்கான வவுச்சர்கள் மீள வழங்கப்படவுள்ளன-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நிதி ஒதுக்கீடு!

0
135

(முஹம்மட் பயாஸ்)

imageகாத்தான்குடி பிரதேசத்தில் அதிகளவான மக்கள் வசித்து வருவதுடன் தமது அன்றாட தேவைகளுக்கு அதிகளவான நீரையும் பயன்படுத்தி வருகின்றனர். மக்களின் அதிக பயன்பாட்டின் மூலமாகவும் சனத்தொகை பெருக்கத்தின் கரணமாக அதிகரித்து வரும் தேவைகள் காரணமாகவும் நிலத்தடி நீர் பழுதடையும் வாய்ப்பு இருப்பதனை அறிந்து அதிகளவான மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடி நீரைப்பெற்றுக்கொள்ளும் வகையில் குழாய்க்கிணறுகள் இலவசமாக சிறீ லங்கா ஹிறா பெண்டேசனினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து சமீபகாலமாக இலவசமாக குடிநீர் இனைப்புக்கான வவுச்சர்கள் வழங்கப்பட்டு இருந்தாலும் புதிய அரசின் கட்டண மாற்றங்களின் அடிப்படையில் அதனை சீர் செய்வதற்காக அதற்கான சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டு இருந்தது.

இப்பொழுது மீண்டும் ஏற்கனவே வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புக்கான வவுச்சர்கள் மீள புதுப்பிக்கப்பட்டு அதனை மக்களுக்கு ரமழான் கால இறுதிக்குள் வழங்குவற்கான வேலைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக மீழ்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு இராஜாங்க அமைச்சரும் சிறீலங்கா ஹிறா பெண்டேசன் நிறுவனத்தின் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் MLAM.ஹிஸ்புல்லாஹ் MA,MP தெரிவித்தார்.

எனவே குடிநீர் இனைப்புக்கான வவுச்சர்கள் ஏற்கனவே பெற்றுகொண்டவர்கள் அதனை கா.குடி மெத்தைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள ஹிறா பெளண்டேசன் காரியாலயத்தில் ஒப்படைத்து மீழ புதுப்பித்துக்க்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்துமாறும் கெளரவ இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

LEAVE A REPLY