உபாலி சமரதுங்கவை மீண்டும் எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

0
21

(அப்துல்சலாம் யாசீம்)

released_open_jailகடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப்பணிப்பாளர் உபாலி சமரதுங்கவை மீண்டும் எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (28) திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா உத்தரவிட்டார்.

திருகோணமலையிலுள்ள அவரது களஞ்சியசாலையில் மீனவர்களுக்கு வழங்கப்படவிருந்த 4 இலச்சத்தி 26 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகள் காணாமல் போனதாக களஞ்சிய பொறுப்பாளரால் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்ட்டிருந்தார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உபாலி சமரதுங்கவின் வழக்கு இன்று நீதவான் டி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்ட போது பிணை வழங்குமாறு அவர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதனையடுத்து பொதுச்சொத்துக்கள் கட்டளை சட்டத்தின்படி நீதவான் நீதிமன்றத்திற்கு பினை வழங்க அதிகாரம் இல்லையென தெரிவித்த நீதவான் அதற்குறிய அதிகாரம் உள்ள நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தல் வழங்கினார்.

LEAVE A REPLY