மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு

0
224

-எம்.எச்.எம்.அன்வர்-

d7f895fd-f13e-466b-98fa-84d363a69cc2மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வொன்று நேற்று 27.06.2016 இடம்பெற்றது. அரச அதிபர் பி எஸ் எம் சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விஷேட மார்க்க சொற்பொழிவினை மௌலவி அப்துல் ஹமீட் (ஷரயி) நிகழ்த்தினார்

அப்துல் ஹமீட் ஷரயீ தனதுரையில் ,

எமது மார்க்கத்தில் புரையோடிப்போயுள்ள இஸ்லாத்திற்கு முறனான செயற்பாடுகள் காணப்படுகின்றன. குறிகேட்டல், தாயத்துக்கட்டுதல், இசும் கட்டுதல் செயற்பாடுகள் இஸ்லாத்திற்கு மாற்றமானதாகும். பேய் பிசாசு பிடித்தல் போன்ற இன்னோரன்ன விடயங்களும் மலிந்து காணப்படுகின்றன. நோய் ஏற்பட்டால் அவற்றிற்கு நிவாரணம் தேடுவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாகும். இதைவிடுத்து இவர்கள் இவ்வாறான விடயங்களில் ஈடுபடுகின்றனர்.

வட்டி ஹராமாக்கப்பட்ட விடயம் எனத்தெரிந்திருந்தும் வங்கிகளில் நகை அடகு வைக்க எமது மக்களே அதிகம் காணப்படுகின்றனர்.

மனித நேயத்தைப்பற்றி இஸ்லாம் தெளிவாகக் கூறுகின்றது ஒருவருடைய மானம் ஒருவருடைய சொத்து ஒருவருடைய உயிர் என்பன புனித கஃபாவை விட மேலானது என முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள். தற்போது உயிர் மற்றும் மானம் மரியாதை என்பன எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது இதை இஸ்லாம் மிக வன்மையாக கண்டிக்கிறது.

சகோதரர்களே, பெரியார்களே முஸ்லிம் ஒருவரின் தனி மனித நடத்தையை பார்க்காது குர்ஆன் ஹதீஸை நீங்கள் பார்க்க வேண்டும், அத்துடன் தற்போதுள்ள முக்கிய பிரச்சினை ஊடகங்கள் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கின்றன. தீவிரவாதிகள் என எல்லோரையும் காட்டுகின்றது. இது தவறான விடயமாகும், இவ்வாறு தனதுரையில் தெரிவித்தார்.

மாவட்ட செயலக கலாச்சார பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மாவட்ட திவிநெகும பணிப்பாளர், கணக்காளர், திவிநெகும பிரிவு கணக்காளர் மற்றும் பிரதேச செயலாளர்கள் உட்பட சமயத்தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

2e2571bc-aa99-4d76-9ba1-373397e4e7c2

dceb79ab-0198-4fca-9b62-a84532678b10

LEAVE A REPLY