இ.போ.சபையின் கிழக்கு பிராந்திய தலைமைக் காரியலயத்தின் இப்தார் நிகழ்வு

0
165

(எம்.எம்.ஜபீர்)

page1இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு பிராந்திய தலைமைக் காரியலயத்தினால் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு மூவீன இன மக்களையும் ஒன்றிணைத்து கிழக்கு பிராந்திய தலைமைக் காரியாலயத்தின் கல்முனை அலுவலகத்தில் நேற்று (27) நடைபெற்றது.

கிழக்கு பிராந்திய தலைமைக் காரியாலயத்தின் பிரதான பிராந்திய முகாமையாளர் ஏ.எல்.சீத்தீக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதி இளைஞர் அமைப்பாளரும் நற்பிட்டிமுனை அல்-கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிஷாட் பதீயுதீனின் இணைப்பாளருமான சீ.எம்.ஹலீம், இலங்கை போக்குவரத்து சபையின் உத்தியோகத்தர்கள், கல்முனை பிரதம தபால் அலுவலக உத்தியோகத்தர்கள், கல்முனை வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், கல்முனை காணி மற்றும் மின்சார சபையின் உத்தியோகத்தர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், பொது மக்கள், வர்த்தகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

விசேட மார்க்க சொற்பொழிவை கல்முனை நகர பள்ளிவாசாலின் பிரதம இமாம் மௌலவி ஏ.இக்பால் நிகழ்த்தினார்.

இக்காரியாலயத்தினால் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வுக்கு உதவி வழங்கிய வர்தகர்களும், தனவந்தவர்களும் குறிப்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதி இளைஞர் அமைப்பாளரும் நற்பிட்டிமுனை அல்-கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவரும் கைத்தொழில், வர்த்தக துறை அமைச்சர் றிஷhட் பதீயுதீனின் இணைப்பாளருமான சீ.எம்.ஹலீமுக்கும் கிழக்கு பிராந்திய தலைமைக்கரியாலயத்தின் பிரதான பிராந்திய முகாமையாளர் ஏ.எல்.சீத்தீக் விசேடமாக நன்றிகளை தெரிவித்தனர்.

20160627_175222 20160627_180833 20160627_180838 20160627_183300

LEAVE A REPLY