(Highlights-Video) முத்தரப்பு ஒருநாள் தொடர்: அவுஸ்திரேலியா கிண்ணத்தைக் கைப்பற்றியது

0
15

24col6153-720x480131718049_4477581_27062016_aff_cmyமுத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 58 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றுள்ளது.

பிறிஜ்டவுனில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 270 ஓட்டங்களை பெற்றது.

அவுஸ்திரேலிய அணியின் சார்பில் துடுப்பாட்டத்தில் மத்தியூ வாட் 57 ஓட்டங்களையும் பிஞ்ச் 7 ஓட்டங்களையும் பெய்லி 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் ஜேசன் ஹோல்டர் மற்றும் கப்ரியல் தலா 2 விக்கெட்களையும் பிராத்வெயிட், பொலார்ட், நரைன் மற்றும் சுலைமான் பென் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 45.5 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 212 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள 58 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றியை தனதாக்கியது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பில் துடுப்பாட்டத்தில் ஜோன்சன் சார்லஸ் 45 ஓட்டங்களையும் ராம்தின் 40 ஓட்டங்களையும் ஹோல்டர் 34 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் ஹசில்வூட் 5 விக்கெட்களையும் மிச்சேல் மார்ஷ் 3 விக்கெட்களையும் நாதன் கோல்டர் நைல், ஸம்பா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய வீரர் மிச்சேல் மார்ஷ் தெரிவானார். அதேவேளை தொடரின் ஆட்டநாயகனாக ஹசில்வூட் தெரிவானார்.

#Thinakaran

LEAVE A REPLY