லெபனான் கிறிஸ்தவ கிராமத்தில் பல தற்கொலை தாக்குதல்கள்

0
98

coltkn-06-28-fr-03162938091_4478004_27062016_mssகிழக்கு லெபனானில் கிராமமொன்றில் இடம்பெற்ற ஒன்றுக்கு மேற்பட்ட தற்கொலை தாக்குதல்களில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டு மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

சிரிய எல்லையை ஒட்டிய கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் கா கிராமத்தில் நான்கு தற்கொலைதாரிகள் குண்டை வெடிக்கச் செய்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் தாக்குதலை நடத்திய தரப்பு குறித்து உறுதியாகவில்லை.

எனினும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) குழுவே இதன் பின்னணியில் இருப்பதாக லெபனான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐ.எஸ் குழு கடந்த காலங்களில் லெபனானில் பல தாக்குதல்களை நடத்தியபோதும் நேற்று இடம்பெற்ற தக்குதல்களுக்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை.

சிரிய உள்நாட்டு யுத்தம் காரணமாக லெபனானில் மதப் பிளவுகள் தீவிரமடைந்துள்ளன. தாக்குதல்தாரி ஒருவர் பாதுகாப்பு படையினர் மீது கைக்குண்டை எறிந்ததை அடுத்து மக்கள் பரபரப்பில் ஒன்று திரண்டபோது தற்கொலைதாரிகள் குண்டை வெடிக்கச் செய்ததாக பார்த்தவர்கள் விபரித்துள்ளனர். எனினும் தாக்குதலுக்கான இலக்கு பற்றி தெளிவில்லாமல் உள்ளது. 2011 யுத்தம் ஆரம்பமானது தொடக்கம் இந்த எல்லைப் பகுதியை பயன்படுத்தி ஜிஹாதிக்கள் சிரியாவுக்குள் ஊடுருவி வருகின்றனர்.

#Virakesari

LEAVE A REPLY