Manarian’s Daystars இன் வருடாந்த இப்தார் நிகழ்வு

0
43

received_11171365816636402016ம் வருடத்துக்கான மருதமுனை Manarian’s Daystars இனுடைய வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று (27) திங்கட்கிழமை பி.ப. 5.45 மணிக்கு அல் மனார் மத்திய கல்லூரியின் அஷ்ரப் ஆராதனை மண்டபத்தில் அமைப்பின் தலைவர் எச்.எம்.ஹுமைஸ் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் அமைப்பில் அங்கத்துவம் பெறுகின்ற 2008 இல் க.பொ.த. சா/தரத்திலும் 2011 இல் க.பொ.த. உ/தரத்திலும் கல்வி கற்ற பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விஷேட விருந்தினர்களாக 2008 மற்றும் 2011 இல் மேற்படி மாணவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வை பிரதிச் செயலாளர் SM.சுஜான் நெறிப்படுத்தினார். வரவேற்புரையுடன் சேர்ந்ததாக அமைப்பின் கொள்கைகள் தொடர்பில் தவிசாளர் W.வஸீம் சஜ்ஜாத் சபையோருக்கு விளக்கமளித்தார்.

விஷேட உரையாக 2008 இல் கற்பித்த ஆசிரியராகவும் தற்போதைய அல் மனார் மத்திய கல்லூரியின் பிரதி அதிபராகவும் இருக்கின்ற A.முஹம்மட் அன்ஸாரின் உரை இடம்பெற்றது. அவர் தனது உரையில் கற்பித்த காலங்களில் இந்த மாணவர்களிடம் காணப்பட்ட திறமைகளை கண்டு வியந்ததாகவும் புதியவற்றை அறிமுகம் செய்யக்கூடிய ஆளுமை இந்த மாணவர்களிடத்திலே காணப்பட்டதை தான் பல்வேறு சந்தர்ப்பங்களில் அனுபவ ரீதியாக உணர்ந்ததாகவும் சிலாகித்து பேசினார். மேலும் இவ் இப்தார் நிகழ்வு தான் எதிர்பார்த்ததை விட சிறப்பாகவும் வித்தியாசமாவும் இருந்ததாகவும் ஏற்பாடு செய்த Manarian’s Daystars அமைப்புக்கு நன்றிகளை தெரிவித்து விடைபெற்றார்.

received_1117135934997038 received_1117136648330300 received_1117136728330292

LEAVE A REPLY