(Poem) ‘ஞான’க் கடிதம்

0
34

(நிஷவ்ஸ்)

எழுதிய கடிதத்தின்
எடுத்த பிரதியை
அல்லாஹ்வுக்கு
அனுப்பென
அடாவடியாய் சொன்னவனே,

இருளில் எழுந்து
இரு கரம் ஏந்தி
உருகிப் பிரார்த்தித்து
ஒரிஜினலே அனுப்புகிறோம்
உனக்கு எதிராக.

இன்ஷா அல்லாஹ்
இந்த மடலுக்கு
முத்திரையின்றி
முறையாய் பதில் வரும்.
முகத்திரை கிழியும்
முடியும் உந்தன்
அகத்தின் ஆணவம்

உன்னைப் பார்க்க
ஒரு படி மேலே
சொன்னவன் பிர் அவுன்
என்னவாய் ஆனான்
எடுத்துப் படி.

அல்லாஹ்வுக்கெதிராய்
அம்பு எய்வதாய்
சொல்லிய கயவன்
இல்லாது அழிந்ததாய்
இருக்குது சரித்திரம்.

ஹலாலைக் கடித்து
ஹபாயாவைக் கடித்து
அளவுக்கு மீறி
அள்ளாஹ்வுக்கு கேலியாய்
உளறும் கயவனே
ஒன்றைப் புரிந்து கொள்.

எங்கள் அல்லாஹ்
இரக்கம் உள்ளவன்.
எல்லோர்க்கும் அருளை
இறக்கி அருள்பவன்.
பிடிக்க நினைத்தால்
துடிக்கப் பிடிப்பவன்.

இப்போதேனும்
தப்பை நிறுத்து
இல்லாது போனால்
எதிர் பார்த்திரு.

LEAVE A REPLY