முஸமிலின் மனைவிக்கு அழைப்பாணை

0
87

mohammed-muzammilவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர், மொஹமட் முஸமிலின் மனைவி நதீகா ஹர்ஷிணி பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவுக்கு இன்று(27) அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த அரசாங்க காலத்தில், ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தான வாகனங்களை பாவித்து சுமார் 62 லட்சம் ரூபா அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பில் வாக்கு மூலம் வழங்கவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நிதி அவரது வங்கி கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் வழங்க கடந்த 20ஆம் திகதி நிதி குற்ற விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-ET-

LEAVE A REPLY