ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அதிபர் எர்துவான் மன்னிப்பு கோரினார்: ரஷியா

0
118

151126094635_russi_2911119gகடந்த ஆண்டு, சிரியா எல்லையில் பறந்த ரஷிய ராணுவ விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதற்காக துருக்கி அதிபர் எர்துவான் மன்னிப்புக் கோரி உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

ரஷியா – துருக்கி இடையேயான உறவுகள் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும், நடந்த சம்பவம் குறித்து எர்துவான் தன்னுடைய ஆழ்ந்த வருத்தங்களை ரஷிய அதிபர் புடினுக்கு எழுதிய கடிதத்தில் கூறியதாக ரஷியா தெரிவித்துள்ளது.

ரஷியாவின் இந்த அறிக்கை குறித்து துருக்கி இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் ஒரு பெரிய நெருக்கடியை தூண்டியது.

இதன் காரணமாக, துருக்கி மீது ரஷியா சில வர்த்தகத் தடைகளை பிறப்பித்தது. இந்த தடை உத்தரவு துருக்கி அதிபர் எர்துவான் மன்னிப்பு கோரும் வரை விலக்கப்பட மாட்டாது எனவும் ரஷ்யா கூறியிருந்தது.

-BBC-

LEAVE A REPLY