மெஸ்சியை தொடர்ந்து மேலும் சில வீரர்கள் ஓய்வு பெற வாய்ப்பு: செர்ஜியோ அக்யூரோ

0
147

201606271846464889_More-Argentina-players-may-retire-from-internationals-Sergio_SECVPFஅர்ஜென்டினா அணியின் தலைசிறந்த வீரரான மெஸ்சி, தனது நாட்டுக்கு மதிப்புமிக்க மிகப்பெரிய சாம்பியன் பட்டங்களை வாங்கி கொடுக்க முடியாத கவலையில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் இதே எண்ணத்தில் பல வீரர்கள் இருப்பதாக அந்த அணியின் செர்ஜியோ அக்யூரோ கூறியுள்ளார்.

இதுகுறித்து செர்ஜியோ அக்யூரோ கூறுகையில் ‘‘மெஸ்சி மட்டும் அணியில் இருந்து விலகவில்லை. மேலும் வீரர்கள் விலக வாய்ப்புள்ளது. என்னைப்போல் பல வீரர்கள் அணியில் நீடிக்க வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்று ஆலோசனை செய்து கொண்டிருக்கிறோம்.

ஓய்வு பற்றி சிந்திக்க வேண்டியதில்லை. அதே சமயத்தில் தற்போது அர்ஜென்டினா வீரர்களின் நினைப்பில் ஓய்வு என்ற விஷயங்கள் வந்துள்ளன. ஆகையால் இது நடக்கலாம். ஆனால் அதை வெளிப்படுத்துவது கடினம்.

மெஸ்சியின் பெனால்டி ஷூட் வீணானபோது, அவர் பெரிதும் பாதிக்கப்பட்டார். இதுவும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. வீரர்களின் அறையில் அவரை பார்க்க மிகவும் கடினமாக இருந்தது. நாங்கள் எல்லோரும் பாதிக்கப்பட்டோம். தோல்வியை மறந்து முன்னேறிச் செல்வதற்கு ஏதாவது உள்ளதா? என்பது பற்றி யோசிக்க முயற்சி செய்வோம். திரும்பவும் எங்கள் பக்கம் அதிர்ஷ்டம் இல்லை’’ என்றார்.

மான்செஸ்டர் கிளப் அணியின் முன்கள வீரராக விளையாடி வரும் 28 வயதாகும் அக்யூரோ, கடந்த 8-வருடமாக மெஸ்சி உடன் விளையாடி வருகிறார். ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில் கோன்ஸலோ ஹிகுயெனுக்கு மாற்று வீரராக அக்யூரா களம் இறங்கினார்.

கோபா அமெரிக்கா இறுதிப்போட்டியில் 50 நிமிடம் மெஸ்சியுடன் இணைந்து போராடியும் இவரால் கோல் அடிக்க முடியாமல் போனது.

LEAVE A REPLY