மொகமது ஆமிரால் உலகின் சிறந்த பந்து வீச்சாளராக முடியும்: மிஸ்பா உல் ஹக்

0
136

201606271943351064_Amir-Can-Become-World-Best-Bowler-Says-Misbah-ul-Haq_SECVPFஇங்கிலாந்து- பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் லார்ட்ஸில் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்டில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமிர் விளையாட இருக்கிறார். எந்த மைதானத்தில் ஐந்தாண்டு தடை பெற்றாரோ?, அந்த மைதானத்தில் இருந்து மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பிக்க இருக்கிறார்.

ஆமிர் தடைபெற்ற காலத்தில் சர்வதேச கிரிக்கெட்டின் மிகப்பெரிய வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். தற்போது ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் அவர், தனது திறமையை இழக்கவில்லை என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மிஸ்பா உல் ஹக் கூறுகையில் ‘‘அவர் வேகமாக பந்து வீசுவது, ஸ்விங் செய்வது, அவருடைய கட்டுப்பாடு ஆகியவற்றை பார்த்தீர்கள் என்றால், எல்லாமே அப்படியே இருக்கிறது. அவர் இன்னும் உலகின் சிறந்த பந்து வீச்சாளராக முடியும்.

அவர் தடையில் இருந்து மீண்டு வந்தபின் சிறப்பாக பந்து வீசுகிறார். இந்த தொடரில் நெருக்கடி இருக்கும் என்பது அவருக்குத் தெரியும். இருந்தாலும், அதை அவர் சிறப்பான முறையில் எதிர்கொள்வார். இங்கிலாந்தில் மறுபிரவேசம் செய்து அவரது ரசிகர்களிடம் மீண்டும் இடம்பிடிக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பு’’ என்றார்.

LEAVE A REPLY