8 ஆண்டுகளுக்குப் பிறகு அரைசதம் இல்லாத தொடர்

0
122

201606272141466808_AB-failed-to-score-a-fifty-in-a-series-of-at-least-three_SECVPFதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனும், அதிரடி வீரருமான ஏபி டி வில்லியர்ஸ் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆக இருந்து வருகிறார். தற்போது வரை ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார். தனது அபார பேட்டிங்கால் பந்து வீச்சாளரை பீதியடைய வைக்கும் இவர், மைதானத்தில் எந்த பக்கமும் பந்தை விரட்டும் வல்லமை படைத்தவர். ஆகையால் இவரை செல்லமாக ‘360 டிகிரி’ என்று அழைப்பார்கள்.

32 வயதாகும் ஏபி டி 2004-ம் ஆண்டு தனது 20 வயதில் இங்கிலாந்து அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 2005-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

அறிமுகமானதில் இருந்து சுமார் 4 ஆண்டுகள் கழித்து 2009-ல் இருந்து நட்சத்திர வீரராக திகழ்ந்தார். ஒருநாள் போட்டியில் அபார பேட்டிங்கால் ரசிகர்களை வசியப்படுத்தினார். பந்தை நாலாபுறம் பறக்க விட்டு ரன்களை வாரிக்குவித்தார். இதனால் 206 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8742 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 53.63 ஆகும். 24 சதம், 48 அரைசதங்கள் விளாசியுள்ள ஏபி டி அதிகபட்சமாக 162 ரன்கள் குவித்துள்ளார்.

2008-க்குப்பிறகு 3 போட்டிகளுக்கு மேல் கொண்ட தொடரில் குறைந்தது ஒரு அரைசதமாவது அடித்துவிடுவார். இப்படி பெயர் வாங்கிய ஏபி டி-க்கு நேற்றோடு முடிந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடர் சரியாக அமையவில்லை. அவர் ரன் அடிக்க திணறியதால் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக மொத்தம் ஆறு லீக் போட்டிகளில் விளையாடிய அவர் முறையே 31, 22, 39, 27, மழையினால் ஆட்டம் இல்லை, 2 என ரன்கள் எடுத்திருந்தார். சுமார் 8 வருடங்களுக்கு பின் ஃபார்ம் இன்றி ஏடி பி சொதப்பியது இதுதான்.

இதுகுறித்து ஏபி டி கூறுகையில், ‘‘எங்கள் அணியில் என்னுடன் சேர்ந்து இரண்டு பேர் ஃபார்ம் இன்றி தவித்தோம். எனக்கு இந்த தொடர் மோசமாக அமைந்தது. முக்கிய பங்கு வகித்து அதிக ரன்கள் குவித்திருக்கவேண்டும். துரதிர்ஷ்டவசமாக இது நடக்காமல் போய்விட்டது’’ என்றார்.

LEAVE A REPLY