(Photo) வாகனம் திருத்துமிடத்தில் தீப்பிடித்ததில் வாகனங்கள் எரிந்து நாசம்: மட்டக்களப்பு பிள்ளையாரடியில் சம்பவம்

0
20

(விசேட நிருபர்)

b9465ef3-0d01-4a42-ad12-a4f9f152aa38மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு பிள்ளையாரடியில் வாகனம் திருத்தும் கறாஜ் ஒன்று இன்று(27.6.2016) திங்கட்கிழமை தீப்பிடித்து எரிந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து நாசமடைந்துள்ளன.

இன்று பிற்பகள் 12.மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு பிள்ளையாரடியிலுள்ள வாகனம் திருத்துமிடமான கறாஜில் வேன் ஒன்றை திருத்திக் கொண்டிருந்த போது தீப் பிடித்துள்ளது.

இதனையடுத்து அங்கு திரண்ட பொதுமக்களும் அங்கு வேலை செய்தவர்களும் சேர்ந்து தீ அணைத்துள்ளனர்

இந்த தீ விபத்தினால் அந்த வாகனம் திருத்து மிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வேன் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள், இரண்டு வாகன இயந்திரங்கள் என்பன முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

இதனால் சுமார் 35 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இதன் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த தீ விபத்து தொடர்பில் மட்டக்களப்பு பொலிசார் ஸ்த்தளத்திற்கு விரைந்து விசாரணைகளை நடாத்தியதுடன், தொடர்ந்து விசாரணைகளை நடாத்தி வருவதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

வேன் ஒன்றை திருத்திக் கொண்டிருந்த போது அந்த வேனில் இருந்து தீ வெளியாகியதாகவும் அதனையடுத்து தீப்பிடித்ததாகவும் இங்கு வேலை செய்பவர்கள் தெரிவித்தனர்.

3fd35f10-8bc8-42a7-8468-21c83cdcff0c

97bccf93-67d2-4b51-9442-72b7da7d95c9

792dde0c-5ca2-4941-922a-a567e9818181

6454f545-c936-4ece-a60d-1211ec8f04d5

24948f95-d49e-4c9e-97b0-23395d46b431

b9465ef3-0d01-4a42-ad12-a4f9f152aa38

d14d7348-6c9e-477d-b3f6-0dec95e0cab3

d97cab81-e912-4f62-8ba3-d5de30d972b6 (1)

d97cab81-e912-4f62-8ba3-d5de30d972b6

ff24441c-cfbe-4157-b84d-8e8d196516e7

LEAVE A REPLY