இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற NFGGயின் வருடாந்த இப்தார் நிகழ்வுகள்

0
176

(NFGG ஊடகப் பிரிவு)

pageபுனித ரமழான் மாதத்தை முன்னிட்டு நல்லாட்சிகான தேசிய முன்னணியின் (NFGG) ஏற்பாட்டில் பிரதி வருடமும் நடாத்தப்படும் இப்தார் நிகழ்வுகள் இம்முறையும் மிகச்சிறப்பான முறையில் காத்தான்குடியில் நடைபெற்றன.

ஆண்கள் பெண்களுக்கென பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்படும் இந்நிகழ்வுகளில் இம்முறை ஆண்களுக்கான இப்தார் நிகழ்வு 24.06.16 (வெள்ளிக்கிழமை) NFGG கிழக்குப்பிராந்திய காரியாலய வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் MSM. நுஸ்ரி நளீமி மார்க்க சிறப்புரை ஒன்றினை நிகழ்த்தினார். அத்துடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மானினாலும் உரை நிகழ்த்தப்பட்டது.

இம்முறை மகளிருக்கான இப்தார் நிகழ்வுகள் மிக நீண்ட தூரங்களிலிருந்து வருகை தருகின்ற சகோதரிகளின் நலனைக் கருத்திற்கொண்டு இரண்டு தினங்களில் இரு வெவ்வேறு இடங்களில் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது.

மகளிருக்கான முதலாவது நிகழ்வு 25.06.2016 (சனிக்கிழமை) அன்று காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்தள்ள NFGG காரியாலய வளாகத்தில் நடைபெற்றது. இதில் சகோதரி பர்சானா இஸ்லாஹிய்யா இப்தார் சிறப்புரை ஒன்றினை நிகழ்த்தினார்.

மகளிருக்கான இரண்டாவது இப்தார் நிகழ்வு 26.06.2016 (ஞாயிற்றுக்கிழமை) புதிய காத்தான்குடி பதுரிய்யா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஜாமிஆ நழீமிய்யாவை சேரந்த சகோதரர் ஷகீப்பினால் மார்க்க சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. மகளிருக்கான இரண்டு நிகழ்வுகளிலும் NFGGயின் தவிசாளர் அப்துர் ரஹ்மானும் உரையாற்றினார்.

தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

IMG-20160627-WA0017 IMG-20160627-WA0019 IMG-20160627-WA0020 IMG-20160627-WA0023 IMG-20160627-WA0025 IMG-20160627-WA0027 IMG-20160627-WA0031 IMG-20160627-WA0032 IMG-20160627-WA0034

LEAVE A REPLY