ஞானசார தேரரின் இனவாதக் கருத்துக்களை முஸ்லிம் உறவுகள் எவ்வாறு அணுக வேண்டும்

0
213

(முகம்மது பர்சாத்)

galagoda-atte-gnanasara Thero BBSமஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட இனவாத அமைப்பான பொது பல சேனா கடந்த ஆட்சியில் அவர்களின் இனவாத செயற்பாடுகள் பகிரங்கமாக அரங்கேரியது அனைவரும் அறிந்த விடயமாகும்.

அதன்பின்னரான ஆட்சி மாற்றத்தின் பின் அவர்களின் நடவடிக்கைகளை பகிரங்கமாக செயற்படுத்துவதற்கு சற்று தடையாக இருந்தாலும் தற்போதைய சூழலில் பொது பல சேனாவின் செயற்பாடுகளையும் இனவாத கருத்துக்களையும் மீண்டும் அவதானிக்க முடிகிறது.

பொது பலசேனாவின் செயற்பாடுகள் அன்மைக்காலமாக பொரும்பான்மை சகோதரர்கள் மத்தியிலும் அதிருப்தியான நிலை உருவாக்கி இருந்தது.

இதை உணர்ந்த பொது பலசேனா அவர்களின் செயற்பாட்டை சற்று வித்தியாசமான முறையில் தொடர தலைதூக்கியதே “சிங்கலே” என்ற அமைப்பாகும். இதனை நிறுவி அதனூடாக இனவாதத்தை தினிக்க முனைந்தார்கள். ஆனால் பொரும்பான்மை சகோதரர்கள் “சிங்கலே” என்ற வாசகத்தை வெறும் ஸ்டிக்கர்களாக மாத்திரம் பாவித்தார்கள். சிங்களே என்ற விடயத்தில் நினைத்த இலக்கை அடைய முடியாமல் போய்விட்டது

அதன் பின்னர் ஞானசார தேரர் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான பல நாசகார செயல்களில் ஈடுபட்டார்.

இந்த விடயங்களில் முஸ்லிம் சமூகத்தினர் மிகவும் நிதானமாக நடந்துகொண்டுள்ளார்கள் என்றே கூற வேண்டும். (அளுத்கம தொடக்கம் மஹியங்கனை வரை)

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மஹியங்கனை பிரதேசத்தில் நடந்து முடிந்த குறித்த விடயத்தை பூதாகரமாக்க முயற்சித்தனர். அந்த விடயத்திலும் அப் பிரதேச சகோதரர்கள் மிகவும் நிதானமாக நடந்துகொண்டார்கள்.

மஹியங்கனை பிரதேசத்தில் பொது பல சேனாவின் சத்யா கிரக போராட்டத்தில் ஞானசார தேரரின் கருத்து தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு முஸ்லிம் கவுன்சியல் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தது.

இந்த கடிதம் தொடர்பில் ஞானசாரவின் கருத்தானது முஸ்லிம் கவுன்சில் அனுப்பிய கடிதத்தின் கொப்பி ஒன்றினை முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஊடாக அல்லாஹ்வுக்கு அனுப்பினாலும் நாங்கள் பயப்படமாட்டேம் (அஸ்தஹ்பிருல்லாஹ்) என செல்லும் கருத்தானது ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மனதையும் புன்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

அத்துடன் அவரது கருத்தில் தெளிவாக முஸ்லிம்களுடன் சண்டையிடவும் தயார் என பகிரங்கமாக குறிப்பிடுகிறார்.

இந்த கருத்தை தொடர்ந்து சமூக வளைத்தளங்களில் முஸ்லிம் சகோதரர்கள் ஞானசார தேரரின் புகைப்படத்தை இழிவு படுத்துவதும் பெளத்த மதத்தை கெச்சைப்படுத்தும் வகையிலும் சிங்கள சகோதர்களுடன் இனவாத கருத்துக்களை பகிர்ந்துகொள்வதையும் அதிகமாக அது போன்ற செய்திகள் பகிரப்படுகின்றமையும் அவதானிக்க முடிகிறது.

பெதுபலசேனாவின் இனவாதத்தையும், பெளத்த மதவாதத்தையும் எதிர்கின்ற நடுநிலையான சிங்கள மக்கள் நமக்கு ஆதரவாக செயற்படுகின்றவர்களையும் நாம் கவனத்தில் கொண்டு நம்முடைய பதிவுகளும் கருத்துக்களும் அந்த மக்களின் நடுநிலையை கேள்விக்கு உட்படுத்தாமல் செயற்பட்டு, இந்த இனவாதிக்கு எதிராக அவர் சார்ந்த சமூகத்தில் அவருக்கு எதிராக பேச வைக்க வேண்டும்.

இனவாத கருத்துக்களை சமூகவலயதளங்களிலும் அவரது முகப்புத்தகத்திலும் கக்கி அதனூடாக முஸ்லிம்கள் சிங்கள சகோதரர்களை ஆத்திரமூட்டி அதில் நமது சகோதர்கள் செல்லும் கருத்துக்களையும் பெளத்த மதத்திற்கு எதிரான கருத்துக்களாக திரிவுபடுத்தி ஒருவகையான சமூக வளைத்தளங்களின் ஊடாக இனவாதத்தை உறுவாக்க ஞானசார தேரர் முயல்கிறார்.

ஞானசாரவின் செயற்பாட்டாள் பல உயிர்களையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்து வாழும் நம் சமூகம் இவரின் விடயத்தில் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும்.

நமது விமர்சனங்கள் ஞானசாரவின் செயற்பாடுகளுக்கு ஒரு போதும் சாதகமாக அமைந்துவிடக்கூடாது.

ஞானசாரா தேரரின் கருத்துக்கள் தொடர்பில் நாம் சமூக வளைத்தளங்களில் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும்.

அத்துடன் அவரது இனவாத செயற்பாடுகள் தொடர்பில் முஸ்லிம் அரசியலை தாண்டி புத்திஜீவிளும் சிவில் அமைப்புக்களும் அவதானித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களுடாக ஞானசாரவுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அளுத்தத்தை கொடுப்பதுடன் அவர்களுக்கு நம்மால் முடிந்த பங்களிப்புக்களையும் செய்ய வேண்டும்.

இவரின் இனவாத நடவடிக்கையை அரசியல்கட்சிகள் அவர்களுக்குள் இருக்கும் கட்சி வேறுபாடுகளை கழைந்து முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

அரசியல் வாதிகள், முஸ்லிம் புத்திஜீவிகள், சிவில் அமைப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஞானசாரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் மாத்திரம்தான் அவரின் இனவாத விடயத்தை கட்டுப்படுத்த முடியும் என்பதையும் மீண்டும் கடந்த காலங்களில் நாம் இழந்த அளுத்கமையை போன்று அமைத்து விடாமல், முஸ்லிம் சமூகத்தை நம் தலைமைகள் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சமுக நீதியையும் நல்லாட்சியையும் நிலைநாட்டுவதாக கூறி மக்கள் ஆணையை கேட்ட போது, நம் சமூகம் அரசியல் கட்சிகளுக்கு அப்பால் நின்று ஒன்றுபட்டு சமூக அநீதிக்கு எதிராக வாக்களித்து இந்த நல்லாட்சி அரசை ஏற்படுத்தினோம்.

ஆகவே அந்த நீதியை நிலைநாட்ட தவறுகின்ற அரசை எப்படி ஒற்றுமையுடன் ஆட்சியில் அமர்த்தினோமோ அதே போல் நமக்கு எதிரான அநீதிக்கும் ஒற்றுமையுடன் செயற்படுவோம்.

LEAVE A REPLY