குப்பை நிறைந்த வடிகான்களால் ஆபத்து

0
145

(ஜுனைட் எம்.பஹ்த்)

mms_img764839762_4காத்தான்குடி பிரதான வீதி பஸ் நிலையம் முன்பாக அமைந்துள்ள வடிகான்கள் குப்பை கழிவு பொருட்கள் நிறைந்து சுகாதாரமற்ற வகையில் காணப்படுவதால் பயணிகளும் பொதுமக்களும் பாரிய சுகாதார பிரச்சனைக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இவ் வடிகான்களுக்கு பாதுகாப்பு மூடிகள் இல்லாததால் அதிகமான கழிவுக் குப்பைகள் போடப்படுகிறது.

வெளியூர்களுக்கு பயணிப்பதற்கு பயணிகள் இவ்விடத்தில் தரித்து நிற்பதனால் இவ் வடிகானில் இருந்து வரும் அசுத்தமான தூர்நாற்றம் பொது மக்களுக்கு சுவாச ரீதியாக நோய்களை ஏற்படுத்துவதுடன், நூளம்பு பெருக்கத்திற்கும் முக்கிய பங்காற்றுகிறது.

எனவே, இது தொடர்பில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பரிசோதகர்கள், காத்தான்குடி நகர சபை செயலாளர் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

mms_img764839762 mms_img764839762_2 mms_img764839762_3

LEAVE A REPLY