ஹஜ் குழுவுக்கு ஆதரவாக உயர்­நீ­தி­மன்­றத்தில் மனு

0
129

Hajj muslim islamஹஜ் குழு­வினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் ஏற்­பா­டு­களே சிறந்­த­தெ­னவும் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன் இம்­மு­றையின் கீழ் பேணப்­பட்­டுள்­ளதால் இவ் வழி­மு­றையை அனு­ம­திக்­கும்­ப­டியும் பத்து ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் உயர்­நீ­தி­மன்­றத்தை மனு­வொன்றின் மூலம் கோரி­யுள்­ளார்கள்.

10 ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் கையொப்­ப­மிட்டு கடந்த வெள்­ளிக்­கி­ழமை இம்­ம­னு­வினை சட்­டத்­த­ரணி உதித எக்­க­ல­ஹேவ மூலம் தாக்கல் செய்­துள்­ளனர்.

‘ஹஜ் குழு இவ்­வ­ருடம் முன்­னெ­டுத்­துள்ள ஹஜ் ஏற்­பா­டு­க­ளினால் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் தாம் விரும்­பிய ஹஜ் முக­வர்­களைத் தெரிவு செய்­து­கொள்ளும் வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ளது. ஹஜ் கட்­ட­ணமும் வெகு­வாகக் குறைந்­துள்­ளது’ என்று மனுவில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் மனுவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது ‘முன்பு ஹஜ் முக­வர்­களைத் தேடி யாத்­தி­ரி­கர்கள் போக வேண்­டிய நிலை இருந்­தது. புதிய இவ்­வ­ருட முறையின் கீழ் முக­வர்கள் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களைத் தேடி வர­வேண்­டிய நிலை உரு­வா­கி­யுள்­ளது. அத்­தோடு யாத்­தி­ரி­கர்கள் தாம் விரும்­பிய முக­வர்­க­ளிடம் பேரம் பேசி உடன்­ப­டிக்­கை­யொன்­றி­னையும் செய்து கொள்ளும் நிலை உரு­வா­கி­யுள்­ளது. எனவே ஹஜ் குழு முன்­னெ­டுத்­துள்ள ஹஜ் ஏற்­பா­டு­களை அனு­ம­திக்­கு­மாறு வேண்டிக் கொள்­கிறோம் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

நாட­ளா­விய ரீதியில் நூற்­றுக்­க­ணக்­கான யாத்திரிகர்கள் மனுவில் கையொப்பமிட விருப்பம் தெரிவித்திருந்தாலும் நடைமுறைச் சிரமங்களைத் தவிர்ப்பதற்காக 10 யாத்திரிகர்களே கையொப்பமிட்டுள்ளனர்.

-Vidivelli-

LEAVE A REPLY