ஐரோப்பிய கால்பந்து: ஜெர்மனி, பெல்ஜியம் காலிறுதிக்கு தகுதி

0
18

201606271258010258_Germany-and-Belgium-to-reach-Euro-2016-quarter-finals_SECVPF15-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி- சுலோவாக்கியா அணிகள் மோதின. ஜெர்மனி வீரர்களின் அபாரமான தாக்குதல் ஆட்டத்துக்கு ஈடுகொடுத்து விளையாட முடியாமல் சுலோவாக்கியா திணறியது.

ஜெர்மனி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறியது. ஜெர்மனி அணியில் போடெங் (8-வது நிமிடம்), கோமஸ் (43-வது நிமிடம்), ஜூலியன் டிராக்ஸ்லெர் (63-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.

மற்றொரு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம்- அங்கேரி அணிகள் மோதின. பெல்ஜியம் வீரர்கள் கோல் மழை பொழிந்து அங்கேரியை திணறடித்தனர்.

பெல்ஜியம் 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது. அந்த அணியில் அல்டர் வயரெல்டு (10-வது நிமிடம்), பாட்சுகி (78-வது நிமிடம்), ஈடன் ஹசார்ட் (80-வது நிமிடம்), கிராஸ்கோ (91-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.

பெல்ஜியம் கால்இறுதியில் வேல்ஸ் அணியை ஜூலை 1-ந்தேதி சந்திக்கிறது. முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து குடியரசுவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் இத்தாலி- ஸ்பெயின் (இரவு 9.30 மணி), இங்கிலாந்து அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

LEAVE A REPLY