பிரிட்டன் வெளியேற்றம் எதிரொலி: போப் பிரான்சிஸ் எச்சரிக்கை

0
113

201606271155483822_Pope-Francis-Warns-Against-Balkanisation-Of-Europe-After_SECVPFஐரோப்பிய யூனியனில் இருந்து கடந்த ஜூன் 24-ம் தேதி பிரிட்டன் வெளியேறியது. இதனால் ஐரோப்பியன் பிராந்தியத்தியத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது.

பொதுவாக்கெடுப்பு மூலம் பிரிட்டன் வெளியேறியுள்ள நிலையில், ஐரோப்பியன் யூனியன் துண்டாடுவதற்கு எதிராக போப் பிரான்சிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் போப் கூறியதாவது:-

புது வகையான யூனியன் நாம் அமைக்க வேண்டியிருக்கிறது. இந்த பெரிய அமைப்பில், அதிகப்படியான நாடுகளை கொண்ட யூனியன் இயங்குவதற்கு, ஏதோ ஒரு சிக்கல் நிலவி வருகிறது.

இந்த பொதுவாக்கெடுப்பை தொடர்ந்து ஸ்காட்லாந்து, ஸ்பெயினின் கடலோனியா உள்ளிட்டவற்றின் பிரிவினை கோரிக்கையை வலியுறுத்தும் அபாயம் உள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளின் துண்டாடலுக்கும் இது வழிவகுக்கும்.

புதுமையான படைப்பாற்றல் மற்றும் யூனியனில் உள்ள நாடுகளுக்கு அதிக சுதந்திரம் வழங்குவதன் மூலம் நிலையற்ற தன்மையை மீட்டெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வளைகுடாவின் சர்ச்சைக்குரிய ஆர்மீனியா நாட்டில் இருந்து ரோம் நகருக்கு புறப்படும் போது செய்தியாளர்களை போப் பிரான்சிஸ் சந்தித்தார்.

LEAVE A REPLY