பிரசாந்தனுக்கு பிணை கோரிய மனு தொடர்பான வழக்கு எதிர்வரும் 30.6.2016ம் திகதிக்கு ஒத்தி வைப்பு

0
167

(விசேட நிருபர் )

9ede2000-1d52-470a-8807-e49eb9461160ஆரையம்பதி இரட்டைக் கொலைச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தனுக்கு பிணை கோரிய மனு தொடர்பான வழக்கு எதிர்வரும் 30.6.2016ம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டது.

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தனுக்கு பிணை வழங்க கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை வழக்கு மட்டக்களப்பு மேல் நீதி மன்றத்தி;ல் (27.6.2016) வியாழக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் 30.6.2016ம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி வி.சந்திரமணி ஒத்திவைத்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோருக்கான விளக்க மறியல் ; 28.06.2016 வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் இவருக்கு பிணை கோரிய மணு தொடர்பான வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே எதிர்வரும் 30.6.2016ம் திகதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு காத்தான்குடி பெரிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேக நபர்களான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரான பூபாலபிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY