மனித வளங்களைப் உயரிய மட்டத்தில் பயன்படுத்துவதற்கான “சமூக சந்தைப்படுத்தல்” திட்டம்

0
144

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

e9bc9c9d-669d-4b97-b579-17bf3f3b7156இதுவரை பயன்படுத்தாமல் வீணடிக்கப்படும் மனித வளங்களை தொழில் சந்தைக்குள் உள்வாங்கி அவர்களை உயரிய மட்டத்தில் பயன்படுத்துவதற்கான புதிய திட்டமொன்றை தாங்கள் அமுல்படுத்தவுள்ளதாக மட்டக்களப்பு சர்வோதய நிலையத்தின் சமூக சந்தைப்படுத்தல் “ளுழஉயைட ஆயசமநவiபெ” திட்டத்திற்கான இணைப்பாளர் கே. யசோதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்; உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அமுல்படுத்தப்படவுள்ள ஒரு வருட காலத்திற்கான இத்திட்டத்திற்கு உலக கனேடிய பல்கலைக்கழக சேவை நிறுவனம்  நிதி அனுசரணை வழங்கவுள்ளது.

ஜுலை 01ஆம் திகதியிலிருந்து அமுலாக்கம் செய்யப்படவுள்ள இத்திட்டத்திற்குள் கடந்த கால போரினால் பாதிக்கப்பட்டவர்கள், பள்ளிப்படிப்பை விட்டு நீண்டகாலமாக இடைவிலகிய மாணவர்கள், வேலை தேடிக்கொண்டிருப்போர், வேலையை எதிர்பார்த்துக் காத்திருப்போர், ஒதுக்கப்பட்ட சாரார் ஆகியோர் உள்வாங்கப்படவிருப்பதாகவும் யசோதரன் மேலும் தெரிவித்தார்.

எனவே, இந்த “சமூக சந்தைப்படுத்தல்” திட்டத்தின் கீழ் தொழிற்சந்தைக்குள் உள்வாங்கப்பட விருப்பம் கொண்டவர்கள் மட்டக்களப்பு சத்துருக்கொண்டானிலுள்ள சர்வோதய மாவட்ட பயிற்சிப் பாடசாலையுடன் தொடர்பு கொள்ள முடியும் என சர்வோதய நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல். அப்துல் கரீம் தெரிவித்தார். தொலைபேசி இலக்கங்கள் 0777422690, 0773284976.

LEAVE A REPLY