மதுபோதையில் அம்பியுலன்ஸ் சாரதிகள்: பயத்தில் நோயாளர்கள்

0
147

maxresdefaultதிருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் அம்பியுலன்ஸ் சாரதிகள் மதுபோதையில் அம்பியுலன்ஸ் வாகனங்களை செலுத்தி வருவதாகவும் அதன் பயத்தினால் நோயாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்தும் மற்றைய சாரதிகள் பொலிஸார் பரிசோதனை செய்வார்கள் என பயத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதை குறைத்து வரும் பட்ஷத்தில் அம்பியுலன்ஸ் சாரதிகள் அதிகளில் மது அருந்தி விட்டு நோயாளர்களை ஏற்றிச்செல்வதாகவும் இடையில் மாட்டுடனும் மோதி வருவதாகவும் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி வருவதாகவும் நோயாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அம்பியுலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளாகும் போது மனிதாபிமான முறையில் பொலிஸார் உதவிகளை வழங்கி வருவதாகவும் விபத்துக்குள்ளான சாரதிகளை சோதனையிடுவதில்லையெனவும் நோயாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நோயாளர்களை ஏற்றி வரும் சாரதிகள் நோயாளர்களை வைத்தியசாலை விடுதிக்கு அனுமதிக்க முன்னரே மதுபானசாலைக்கு சென்று சாராயத்தை அருந்தி வாகனத்தை செலுத்தி வருவதாகவும் நோயாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து போக்கு வரத்து பொலிஸாரும் நோயாளர்களின் நலன் கருதி அம்பியுலன்ஸ் சாரதிகள் மது போதையில் வாகனம் செலுத்தினால் சாரதிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நோயாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

LEAVE A REPLY