பௌத்த மத விழுமியங்களை குழிதோண்டிப் புதைக்கும் ஞானசார தேரர் சிங்கள இனத்திற்கும் அப கீர்த்தியை ஏற்படுத்துகின்றார்

0
169

(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)

Maseehudeen inamullahபௌத்த மத விழுமியங்களை குழிதோண்டிப் புதைக்கும் ஞானசார தேரர் சிங்கள இனத்திற்கும் அப கீர்த்தியை ஏற்படுத்துகின்றார்.

“பொலிஸ் மாஅதிபருக்கு முஸ்லிம் கவுன்ஸில் – என்று சொல்லிக் வந்தேறு தம்பி மறக்கல அமைப்பு – அனுப்பி வைத்த முறைப்பாட்டை முஹம்மது நபியூடாக அல்லாஹ்விற்கு அனுப்புமாறு சொன்ன – தன்னை வணக்கத்துக்குரிய பிக்கு என அழைத்துக்கொள்ளும்- ஞானசார தேரர் உண்மையில் பௌத்த மதத்திற்கும் ஆரிய சிங்கள இனத்திற்கும் அவப்பெயரை களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றார்.”

அவருடைய அதே வாயால் நாடு அதிர்சிக்குள்ளாகும் விடயங்களை பேசும்நிலை வர பிரார்த்திக்கும் அதேவேளை எல்லை மீறும் காழ்ப்புணர்வுப் பரப்புரைகள் குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் மாஅதிபர் கவனத்தை ஈர்க்குமாறு தேசிய அரசின் பங்காளி முஸ்லிம் அரசியல் தலைமைகளை கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த நாட்டு முஸ்லிம்கள் எந்தவொரு இக்கட்டான காலகட்டத்திலும் வன்முறைகளை நாடியதில்லை, சட்டம் ஒழுங்கை மதித்து நடப்பவர்கள், காவல்துறை நீதித்துறை மீது நம்பிக்கை வைத்துள்ளவர்கள்.

மேற்படி தேரரின் கூற்று ” முஸ்லிம்கள் விடயத்தில் சட்டம் ஒழுங்கு செல்லுபடியாக மாட்டா, தனது அடாவடித்தனங்கள் தொடரும்” என்ற தோரணையில் அச்சுறுத்தலாக விடுக்கப் பட்டிருக்கின்றது.

அதேவேளை முஸ்லிம்கள் அரேபிய வர்த்தகர்களின் வழி வந்த வந்தேறு குடிகள் இது சிங்கள பௌத்தர்களின் பூமி என்று முஸ்லிம்களை இரண்டாம்தரப் பிரஜைகளாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்க விடயமாகும்.

முஸ்லிகளது இன ரீதியிலான பூர்வீகம் இலங்கையில் அறேபியர்க்ளதும் இஸ்லாத்தினதும் வருகைக்கு முந்தியது என்ற மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை ஆய்வுரீதியாக வெளிக்கொணரும் முஸ்லிம்புத்தி ஜீவிகளிற்கும் இருக்கின்றது.

அவ்வாறு அறேபியர்கள் வழித்தோன்றல்கள் இருந்தாலும் அவர்களும் இந்தியாவிலிருந்து வருகைதந்த ஆரிய சிங்களவர்கள் போல் வரலாற்று பூர்வீகம் கொண்டிருப்பதனை மகாவம்சமும் உறுதிப்படுத்துகின்றது.

இந்தநாட்டில் எவருக்கும் அஞ்சி வாழவோ கெஞ்சி வாழவோ வேண்டிய தேவை சிறுபான்மை இனங்களிற்கு கிடையாது.

புனித ரமழானில் நிதானம் காத்து பொறுமையுடன் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கரமேந்திப் பிரார்த்திப்போம்.

தாசைகளையும் சமூகம் வழங்க முன்வரல் வேண்டும்.

அதேவேளை முஸ்லிம் சமூகத்திற் கெதிரான செயற்பாடுகளை அவ்வப்போது உரியதரப்புக்களின் கவனத்திற்கு கொண்டுவரும் முஸ்லிம் கவுன்ஸில், சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் RRT மற்றும் ARC போன்ற அமைப்புக்களின் செயற்பாடுகளிற்கு பூரண ஆதரவையும் உதவி ஒத்தாசைகளையும் சமூகம் வழங்க முன்வரல் வேண்டும்.

LEAVE A REPLY