(Poem) புதிய தெளபாக் கிதாபு

0
20

(நிஷவ்ஸ்)

பேக் ஐடி திறந்த பாவம்
பிறர் ஆக்கம் கொப்பி செய்து
கேட்காமல் பகிர்ந்த பாவம்
கெட்ட போஸ்ட் போட்ட பாவம்
யார்க்கும் அறியாமல்
யாஹூவில் ஐடி எடுத்து
மூர்க்கமாய் அடுத்தவரை
முறையற்று இழித்த பாவம்
தீர்க்கமாய் மன்னிப்பாய்
திருந்துகிறேன் என்று கேட்போம்

யூடியூப்பில் ரகசியமாய்
யூத் டான்ஸ் ரசித்த பாவம்
கேடு கெட்ட வெப்சைட்களை
கிளுகிளுப்பாய் பார்த்த பாவம்
போடுகின்ற போட்டோக்களை
பொய்யாக எடிட் பண்ணி
ஓடியோவும் மிக்ஸ் பண்ணி
ஓடவிட்ட பாவங்களுக்காய்
உடனடியாய் தெளபா செய்வோம்

பாஸ் வேர்ட்டைக் களவெடுத்து
பாவித்த வைபை கனக்‌ஷன்
பேஷ் புக்கை ஹெக் பண்ணி
பிரச்சினையை தந்த பாவம்
காசு கட்டும் அப் களை
கள்ளத்தனமாய் பெற்ற பாவம்
ஈசியாக செய்து முடித்த
இத்தனை பாவங்களையும்
இறைவா பொறுத்தருள்வாய்.

ஒரு சிம்மில் பொல்லு வைத்து
மறு சிம்மை எடுத்த பாவம்
வருமானம் குறையக் காட்டி
வழங்கும் உதவி பெற்ற பாவம்
கிரடிட் கார்ட்டை கட்டாமல்
கிளம்பி நாடு வந்த பாவம்
பொறுத்தருள வேண்டுவோம்
பொல்லுக்குப் பணம் கொடுப்போம்.

LEAVE A REPLY