மௌலவி ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புங்கள்: முன்னாள் எம்.பி அஸ்வர் வேண்டுகோள்

0
138

(எம்.எஸ்.எம்.சாஹிர்)

ahm-azwer-“நாட்டில் உடனடியாக பல வகையான ஆசிரியர்களை நியமிக்க முடியுமென்றால், மௌலவி ஆசிரியர்களை ஏன் நியமிக்க முடியாது” என முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

பல வகையான ஆசிரியர்களை கல்வி அமைச்சர் 3000, 4000 என்று நியமித்துக் கொண்டு போகின்றார். இந்த அரசாங்கம் வந்த காலத்திலிருந்து மௌலவி ஆசிரியர்களுடைய வெற்றிடங்களுக்கு மௌலவி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதற்காக அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடும், ஏனையவர்களும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்த வண்ணமாக உள்ளார்கள்.

இது கல்வி அமைச்சருக்கு செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கின்றது. இது குறித்து இன்னும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முஸ்லிம் பாடசாலைகள் தேவையில்லை, மொழி அடிப்படையிலே தமிழ், சிங்களம் மாத்திரம்தான் இருக்க வேண்டும் போன்ற நிலைப்பாட்டை கொண்டவர்கள்தான் இன்று அரசாங்கத்திலே மேல் மட்டத்திலே இருக்கின்றார்கள்.

அது அவர்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பா இன்னும் ஏன் மௌலவி ஆசிரியர்களை நியமிப்பதில்லை என்ற கேள்வி முஸ்லிம் சமுதாயத்தின் முன் தோன்றியுள்ளது.

எனவே, இவைகளுக்கும் ஒரு முடிவு எட்டப்பட வேண்டும். உடனடியாக இவ்வளவு ஆசிரியர்களை நியமிக்க முடியுமென்றால், மௌலவி ஆசிரியர்களை ஏன் நியமிக்க முடியாது. என்று கேட்க விரும்புகின்றோம்.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி ஜனாதிபதியும் பிரதம அமைச்சரும் கூடி இந்த இன விரோத சக்திகளுக்கு, செயற்பாடுகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். மௌலவி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். என்றார்.

LEAVE A REPLY