பிறேசில் ஒலிம்பிக்கிற்கு 7 இலங்கையர்கள்

0
157

Logo-National-Olympic-Committee-of-Sri-Lanka_3381500225பிறேசிலின் தலைநகரான ரியோடி ஜெனிரோவில் இம்முறை நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கையைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் 7 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

குறித்த போட்டிகளில் தடகள விளையாட்டு வீர வீராங்கனைகள் 3 பேரும் நீச்சல் வீரர்கள் 2 பேரும் இலக்கிற்கு துப்பாக்கிச்சூடும் வீரர் ஒருவரும் பூப்பந்து விளையாட்டு வீரர் ஒருவரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்படி, அனுருத்த இந்திரஜித் மற்றும் கீதானி ராஜசேகர தொலை தூர ஓட்டங்களுக்காகவும் சுமேத ரணசிங்க ஈட்டி எரிதல் போட்டிக்காகவும் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, பூப்பந்து ஒற்றையர் பிரிவிற்காக நிலுக கருணாரத்னவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, மெத்திவ் அபேசிங்க மற்றும் கிம்கோ ரஹீம் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளுக்காக தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY