சர்வதேச சந்தைகளில் நட்டத்தை எதிர்நோக்கும் பிரிட்டன்

0
122

Five-stacks-of-one-pound-coinsஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியதன் காரணமாக சர்வதேச சந்தைகளில் கோடிக்கணக்கில் நட்டத்தை எதிர்நோக்கி வருகிறது பிரிட்டன்.

தவிர, பவுண்ட் நாணய மதிப்பு 31 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது.

1985 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக சரிவை இப்போது பவுண்ட் சந்தித்திருக்கிறது.

ஐரோப்பிய சந்தைகளில் கடும் சரிவு இருந்தது. பிரான்ஸ் பங்குச்சந்தை 8 சதவீதமும், ஜெர்மனி சந்தை 7 சதவீதமும், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் சந்தையும் கடும் சரிவை சந்தித்தன.

லண்டன் FTSE சந்தை 3.2 சதவீதம் சரிந்தது. அமெரிக்க சந்தையான டவ் ஜோன்ஸ் வெள்ளிக்கிழமை 3 சதவீதம் அளவுக்கு சரிந்தது.

தேவையான சமயத்தில் நிதி உதவி செய்ய தயாராக இருப்பதாக பேங்க் ஆப் இங்கிலாந்து, ஐரோப்பிய மத்திய வங்கி, மற்றும் சீனாவின் மத்திய வங்கி ஆகியவை தெரிவித்திருக்கின்றன.

சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

LEAVE A REPLY