கஹட்டகஹ சுரங்க பணியாளர்கள் 1,800 அடி ஆழத்தின் கீழிருந்து உண்ணாவிரதப் போராட்டம்

0
90

1313383473Surangamநாளாந்த ஆபத்து கொடுப்பனவை 16 ரூபாவில் இருந்து 400 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி குருணாகலை, கஹட்டகஹ காரீய சுரங்கத்தில் பணியாற்றும் பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இவர்களினால் இரண்டாவது நாளாகவும் குறித்த உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

இதன்போது தமது உண்ணாவிரத போராட்டத்தினை ஆயிரத்து 800 அடியின் கீழ் இருந்து முன்னெடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவுகளை வழங்க கோரி கடந்த மார்ச் மாத இறுதிப்பகுதியில் 60 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் 15,000 ரூபா மேலதிக கொடுப்பனவு இம்முறை வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சுமத்தியிருந்தனர்.

-ET-

LEAVE A REPLY