விறுவிறுப்பான கடைசி நிமிடங்கள்! வெற்றியை பறித்தது போர்ச்சுகல்:குரோஷியா அவுட்

0
129

_75699424_football4ஐரோப்பிய கிண்ண கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற “நாக்- அவுட்” (ரவுண்ட ஆப் 16) சுற்றில் போர்ச்சுகல்- குரோஷியா பலப்பரீட்சை நடத்தின.

இறுதியில் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிப்பெற்றது.

ஆட்டத்தின் 90 நிமிடங்கள் முடிவில் இரு அணி வீரர்களும் கோல் போடாததால், கூடுதல் நேரமாக 30 நிமிடங்கள் அளிக்கப்பட்டது.

கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடங்களில் இரு அணி வீரர்களும் பெனால்டி ஷூட்டை தவிர்க்க கடுமையாக போராடினார்கள்.

இறுதியில் ஆட்டத்தின் 117வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணி வீரர் Quaresma முதல் கோல் அடித்து போர்ச்சுகல் ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் அழ்த்தினார்.

இறுதி வரை போராடிய குரோஷியாஅணி வீரர்களால் ஒரு கோல் கூட போட முடியவில்லை.

இதன் மூலம் கூடுதல் நேர முடிவில் போர்ச்சுகல் அணி 1-0 என குரோஷியா அணியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிப் பெற்றது.

காலிறுதியில் போர்ச்சுகல் அணி போலந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.

LEAVE A REPLY