(Photo) சாப்பாட்டு றோளுக்குள் பீடி, உணவகத்திற்கு சுகாதார பகுதி சீல் வைப்பு: காத்தான்குடியில் சம்பவம்

0
48

(விசேட நிருபர்)

c821ade3-a39e-477e-a3c5-edb7b90ba61eமட்டக்களப்பு காத்தான்குடியில் ஹோட்டல் ஒன்றில் தயாரிக்கப்பட்ட ஸோட்டிஸ் சாப்பாட்டு றோல் ஒன்றுக்குள் பற்ற வைக்கப்பட்ட பீடி காணப்பட்டதால் காத்தான்குடி சுகாதார பரிசோதகர்கள் ஹோட்டலை மூடி இன்று (26) சீல் வைத்துள்ளனர்.

காத்தான்குடி பிரதான வீதி ஆறாம் குறிச்சியிலுள்ள ஹோட்டல் கடையொன்றில் இன்று தயாரிக்கப்பட்ட ஸோட்டிஸ் சாப்பாட்டு றோல் ஒன்றை ஹோட்டலுக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சாப்பிட்டுள்ளார். அப்போது குறித்த றோலுக்குள் பற்ற வைக்கப்பட்ட பீடி காணப்படுள்ளது.

இதையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்களிடத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.றஹ்மத்துல்லா தலைமையில் சென்ற குழுவினர் குறித்த ஹோட்டலை பரிசோதனை செய்ததுடன் ஹோட்டலை மூடி சீல் வைத்துள்ளனர்.

குறித்த ஹோட்டல் உரிமையாளரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (27.6.2016) ஆஜர்படுத்தவுள்ளதாகவும் காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஏ.எல்.றஹ்மத்துல்லர் தெரிவித்தார்.

cc8b09c1-2d0e-4000-af6c-5f6dbb69e8c5

d8c0b2d6-2e78-4d39-b3f1-7cc74030fdc2

LEAVE A REPLY