வீதியில் கஞ்சாவுடன் நடமாடியவர் பொலிஸாரிடம் மாட்டினார்

0
127

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Arrested44கஞ்சாவுடன் வீதியில் நடமாடிய ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (ஜுன் 26, 2016) தாம் கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

விற்பனைக்காக தம்வசம் கஞ்சா வைத்திருந்த குடும்பஸ்தரான 65 வயதுடைய நபர் ஏறாவூர் மீராகேணி கிராம வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 4600 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் வீதிகளில் உலாவந்தவாறு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று சந்தேக நபரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY