ஹாபீஸ் நஷீரைப் போன்று நான் இருக்க மாட்டேன்: பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

0
193

(வாழைச்சேனை நிருபர் )

b961a9c5-bdc8-4da0-890f-2eb5663d6a52புனரமைக்கப்படாமல் இருந்த இந்த வீதியை பலர் வந்து பார்த்துவிட்டு சென்று இருக்கின்றார்கள் ஆனால் மக்களின் தேவையை கருத்திற் கொண்டு நிதி ஒதுக்கி வீதிக்கு அடிக்கல் நாட்டி இருக்கின்றோம். இந்த வீதியையும் கிழக்கு மாகாண முதலமைச்சர் வந்து திறந்து வைப்பாரோ தெரியாது என்று கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் உள்ள மீள் குடியேற்ற கிராமங்களான ஹிஜ்ரா நகர் மற்றும் அறபா நகர் போன்ற கிராமங்களுக்கான தார் வீதி அமைப்பதற்கான வேலைத்திட்டத்தினை நேற்று (25.06.2016) மாலை ஆரம்பித்து வைத்து விட்டு ஹிஜ்ரா நகரில் பொது மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

அரசியலில் அதிகாரம் என்பது ஒருவருக்கு தொடர்ந்தேர்ச்சியாக இருக்கின்ற விடயமல்ல அரசியில் என்பதும் அதிகாரம் என்பதும் அந்தஸ்து என்பதும் ஒரு குறுகிய காலத்திற்குள் இருக்கின்ற விடயம்தான் இது முதலமைச்சருக்கும் பொருந்தும் அமீர் அலிக்கும் பொருந்தும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பொருநதும். எனவே அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக மமதையில் ஆடி ஓடி நாங்கள் எங்களைப்படைத்த இறைவனை மறந்து நடந்தவைகளை மறந்து செயற்பட்டு கேவலம் கெட்ட அரசியல்வாதியாக ஹாபீஸ் நஷீரைப் போன்று நான் இருக்க மாட்டேன்.

ஒரு நல்ல அரசியல்வாதியாக இந்த மாவட்டத்தில் உள்ள முஸ்லீம், தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் நம்பிக்கையோடு இருக்கின்ற ஒரு அரசியல்வாதி தொடர்ந்து மக்களின் நம்பிக்கையோடு இருந்து விட்டு மரணிக்க வேண்டும் என்பதுதான் எனது பிராத்தனை.

வெறுமனே பந்தா காட்ட வேண்டும் என்பதற்காக நாங்கள் அரசியல் செய்வதற்கு தயாரில்லை தற்போது ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தில் புதிய வீடுகளை கட்டுவதற்கு யாரும் தயாரில்லை. வீடுகளை கட்டி முடித்ததும் கிழக்கு மாகாண முதலமைச்சர் எனது மாகாணத்திற்குள் கட்டப்பட்டது. அதை நான்தான் திறந்து வைக்க வேண்டும் என்று சொல்லிவிடுவார் என்ற அச்சத்தில் இருக்கின்றார்கள். அடுத்த மாகாண சபை தேர்தல் வந்த பிறகு அவருக்கு நிச்சயமாக இந்த சந்தர்ப்பம் கிடைக்கப்போவதில்லை. அப்போதுதான் புதிய வீடுகளைக்கட்டுவார்கள் என்று நினைக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் உள்ள மீள் குடியேற்ற கிராமங்களான ஹிஜ்ரா நகர் மற்றும் அறபா நகர் போன்ற கிராமங்களுக்கான 02.2 கிலோ மீற்றர் தூரம் தார் வீதி அமைப்பதற்கா மகநெகும திட்டத்தில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் ஒரு கோடி நாட்பது லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கண்கானிப்பில் இவ் வீதி அமையப்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியலாளர் ரீ.பத்மராஜா, மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம்.சாபி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

3e99739e-8594-43df-9dab-e40e9f8ab893

75ea7590-7565-4b12-afc7-93039b1acf23

466f34a6-a4d4-4ddf-be99-b764d52c3d0a

b14e258c-6844-47ce-a548-c7c1e11a3a85

LEAVE A REPLY