ஒற்றுமையை சிதைத்து தனிப்பட்ட அரசியல் செய்ய எவராவது முனைவார்களாக இருந்தால் அவர்களை மக்கள் நிராகரிப்பார்கள்: றியால்

0
151

(வாழைச்சேனை நிருபர்)

acd98781-4cf1-494f-ae9a-71da634a06a3கல்குடாத் தொகுதியில் உள்ள முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒரு தலைமையின் கீழ் ஒற்றுமையுடன் இருக்கின்றார்கள் இந்த ஒற்றுமையை சிதைத்து தனிப்பட்ட அரசியல் செய்ய எவராவது முனைவார்களாக இருந்தால் அவர்களை மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள் என்று ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கல்குடா தொகுதி அமைப்பாளரும் கணக்கறிஞருமான எச்.எம்.எம்.றியால் தெரிவித்தார்.

அவரது ஏற்பாட்டில் வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பதுரியா பள்ளிவாயலில் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு நேற்று (25.06.2016) சனிக்கிழமை இடம் பெற்ற போது அதில் கலந்து  கொண்டு உரையாற்றும்  போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இன்று கல்குடாத் தொகுதி முஸ்லீம் பிரதேசத்தில் முஸ்லீம் காங்கிரசின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுவதுடன் ஆதரவாளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலும்  செயற்பட்டு வருகின்றனர். இச் சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட அரசியல் செய்து கட்சி ஆதரவாளர்களின் ஒற்றுமையை சீர்குழைத்து தனிப்பட்ட செல்வாக்கை செலுத்த எவராவது முற்படுவார்களாக இருந்தால் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் மூலம் கல்குடாத் தொகுதிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற பிரதி நிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் கட்சி ஆதரவாளர்களின் ஆதங்கம் எனக்கு நன்கு தெரியும். என்னை விட எமது தேசியத் தலைவர் றவூப் ஹக்கீமுக்கு கல்குடாவுக்கு தேசியப்பட்டியல் வழங்க வேண்டும் என்ற எண்ணம்  அதிகம் உள்ளது. துரதிஸ்டவசமாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலையிலும் வன்னியிலும் தமது ஆசனங்களை கட்சி இழந்ததால் ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நான் கடந்த தேர்தலின் போது எச் சந்தர்ப்பத்திலும் நான் தேர்தலில் தோல்வியடைந்தால் எனக்கு தேசியப்பட்டியல் தர வேண்டும் என்று கோறிக்கை வைக்கவில்லை. அதை எதிர்பார்த்து தேர்தலுக்கு வரவும் இல்லை. ஆனால் தலைவரும் விரும்புகிறார், கல்குடாத் தொகுதி மக்களுக்கு தேசியப்பட்டியல் ஒன்று வழங்கி அப்பகுதி மக்களை கௌரவப்படுத்த வேண்டும் என்று.

எமது பிரதேச மக்களின் காணிப்பிரச்சினை மிக நீண்டநாளாக பேசப்பட்டு வருகின்ற விடயமே தவிர அது தொடர்பான தீர்வுகள் கிடைத்தாக தெரியவில்லை. இதனால் கட்சியின் தலைவரின் ஆலோசனையின் அடிப்படையில் இது தொடர்பான அனைத்து ஆவனங்களும் திரட்டப்பட்டு  இது தொடர்பாக செயற்பட்டு வருவதுடன் சட்ட வல்லுனரின் ஆலோசனையையும் பெற்று வருகின்றோம் எமது மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பில் நிரந்தர  தீர்வு எமது கட்சியால் நிச்சயம் பெற்றுத்தரப்படும்.

எமது பிரதேசத்தில் உள்ள எதிர்க்கட்சிக்காரர்களினால் சமகாலத்தில் அடிக்கடி பேசப்படும் பிரச்சினை குடி நீர் பிரச்சினையாகும். எமது பிரதேசத்தில் குடி நீர் பிரச்சினையை எமது கட்சியின் தேசியத்தலைவர் என்ன விலை கொடுத்தாவது பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

அந்த குடி நீர் திட்டத்தை பிரதேசத்தில் அனைத்து இடங்களுக்கும் வழங்குவததற்கு அரசாங்கத்திடம் தற்போது பணம் இல்லை. அதனால் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையின் அடிப்படையில் குடி நீருக்குப் பொருப்பான அமைச்சர் என்றவகையில் எமது தேசியத்தலைவர் ஜப்பான் மற்றும் சீனா போன்ற அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

அதனடிப்படையில் இலகு கடன் அடிப்படையில் பணம் கிடைக்கவுள்ளது, பணம் கிடைத்ததும் அவ் வேளைகள் பூரனப்படுத்தப்படும். இத்திட்டம் தொடர்பாக நானும் தலைவரும் தொடர்ந்து பேசி வருகின்றோம். இவைகளை மற்றவர்களைப்போல் பேஸ்புக்கிலும் இணையதளங்களிலும் கொக்கரித்துக் கொண்டு இருக்க எனக்கு விருப்பமில்லை எப்படியோ எமது மக்களுக்கு நல்லவைகள் நடந்தால் போதும் என்று எதிர்பார்க்கின்றவன்தான் நான்.

எமது பிரதேசத்தில் உள்ள இளைஞர் யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினையை தீர்ப்பதற்கு கற்ற சமுகத்தில் இருந்து ஒரு குழு அமைத்து அவர்களுக்கூடாக எமது பிரதேசத்தில் உள்ள தொழில் அற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழங்குவது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். இதன் அடிப்படையில் பிரதேசத்தில் தொழில் பேட்டைகளை அமைத்து அதிகமான தொழில்வாய்ப்புக்களை எமது பிரதேசத்தில் வழங்கி எமது பிரதேசத்தின் வறுமையை ஒழிப்பதற்கான திட்டத்தினை வகுத்து வருகின்றோம்.

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டில் அதிகளவு நிதி கல்குடாத் தொகுதி அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்று நான் தலைவரிடம் கோறிக்கை விடுத்த போது, அவர் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவையும் என்னையும் பாராளுமன்றத்திற்கு  அழைத்து அவரது நிதி ஒதுக்கீட்டில் அதிகளவு நிதியினை எமது பிரதேசத்திற்கு செலவிடுமாறு  கூறியுள்ளார். அதனை மௌலானாவும் பெருமனதுடன் ஏற்று ஒதுக்கடுகள் செய்வதாக கூறியுள்ளார்.

இந்த புனித நோன்பில் இரண்டு பத்து முடிந்த நிலையில் மூன்றாவது பத்திற்கு தயாராகிக் கொண்டு இருக்கின்றோம். நாங்கள் கடைசி பத்து தினங்களையும் பள்ளிவாயலில் இஹ்திகாப் இருந்து நல்மல்கள் செய்வதில் எங்களது நேரத்தைக் கழிப்பவர்களாக இருக்க வேண்டும். இதனை விட்டு விட்டு பேஸ்புக் என்றும் அரசியல் என்றும் நேரத்தை வீணடிக்காமல் நோன்பு இறுதி பத்து தினங்களுக்கும் பேஸ்புக் மற்றும் எமது அரசியலை மூட்டைகட்டி வைத்து விட்டு இறை வணக்கத்தில் அதிகம் ஈடுபாடுடையவர்களாக மாற வேண்டும். அதுதான் நாம் இறைவனுக்குச் செய்யும் நன்றிக்கடனாகும் என்றும் தெரிவித்தார்.

இப்தார் நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நோன்பினை திறந்தனர்.

03ffca25-c240-4d60-9c16-90a519f19065

86aa5603-d28d-4dd2-a33d-cfe1697c1672

449b633b-d906-44fa-880b-05597e57d938

c244156b-9046-448e-b03e-bd0826f0cca0

LEAVE A REPLY