ஐ.சி.சி. விதிமுறைக்கு மாறாக பந்து வீசும் 12-ற்கும் மேற்பட்ட வீரர்களை ஆய்வு செய்கிறது வங்காளசேதம்

0
160

201606251917576689_BCB-to-review-more-than-13-suspect-actions_SECVPFஇந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ஐ.சி.சி. விதிமுறைக்கு மாறாக பந்து வீசியதாக அந்த அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களான தஸ்கின் அஹமது மற்றும் அரபாத் ஷன்னி ஆகியோர் மீது புகார் கூறப்பட்டது.

ஆகையால், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க வங்காளதேச கிரிக்கெட் வாரியம் ஒரு கமிட்டியை உருவாக்க திட்டமிட்டிருந்தது. இந்த கமிட்டியை கடந்த வாரம் நடைபெற்ற பொதுக்குழுவில் உருவாக்கியது. இந்த குழுவிற்கு ஜலால் யூனுஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது வங்காள சேதத்தில் நடைபெற்று வரும் டாக்கா பிரீமியர் லீக் முதல் வாரத்தில் மட்டும் நயீம் இஸ்லாம், பைசல் ஹொசைன், மொமினுல் இஸ்லாம், ரெஜாயுல் கரிம், அமித் குமார் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் முஸ்டாபிஜூர் ரஹ்மான் (இரண்டு முறை) ஆகியோர் மீது நடுவர்கள் புகார் கூறினார்கள். இவர்களுடம் சுமார் 13 பேர் மீது இந்த புகார் எழுந்துள்ளது.

இதனால் ஐ.சி.சி. விதிமுறைக்கு உட்பட்டு வீரர்களை பரிசோதனை செய்யும் கார்டிப் மெட்ரோபொலிடன் யுனிவர்சிட்டியில் இருந்து நிபுணர்களை வரவழைத்து வீரர்களுக்கு ஆலோசனை வழங்க இருப்பதாக ஜலால் யூனுஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜலால் தெரிவிக்கையில் ‘‘டாக்கா பிரீமியர் லீக் தொடரில சுமார் 13 முதல் 14 வீரர்கள் மீது புகார் வந்துள்ளது. அவர்களது பந்து வீச்சை சரி செய்வதற்கான வேலைகளை ரம்ஜான் முடிந்த பின்னர் தொடங்குவோம். வலைப்பயிற்சியில் அவர்களது பந்து வீச்சை மதிப்பீடு செய்வோம். இதில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஓமர் காலித், திப்பு ராய் சவுத்ரி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கோலம் பரூக் ஆகியோர் இந்த மதிப்பீட்டின் போது வீரர்களை கவனிப்பார்கள். எங்களது பார்வைக்கு அவர்கள் பந்து வீச்சில் குறைபாடு இருந்தால் அதை சரிசெய்வோம்.

எங்களது ஆலோசனைகளுக்குப் பிறகு சீராக அவர்களது பந்து வீச்சை சரிசெய்து கொண்டால், அடுத்த ஆண்டு லீக்கில் இடம்பெறுவார்கள். மாறாக தொடர்ந்து தவறு செய்தால் அவர்களுக்கு தடை விதிக்கப்படும்.

தொழில்நுட்ப உதவிக்காக ஐ.சி.சி்.யுடன் தொடர்பில் இருக்கிறோம். கார்டிப் மெட்ரோபொலிடன் யுனிவர்சிட்டியை தொடர்பு கொண்டு அவர்களது நிபுணர்களை டாக்கா வந்து ஆலோசனை வழங்க கேட்டுக்கொண்டுள்ளோம். அப்போது உள்ளூர் பயிற்சியாளருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கார்டிப் மெட்ரோபொலிடன் யுனிவர்சிட்டி நிபுணர்களின் ஆலோசனைகள் கேட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க வசதியாக இருக்கும்’’ என்றார்.

LEAVE A REPLY