கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ: 2 பேர் பலி – 100 வீடுகள் சாம்பல்

0
95

201606251256058624_Two-killed-100-homes-destroyed-by-fast-moving-California_SECVPFஅமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள கென் கவுண்டியில் திடீரென காட்டுத் தீ பரவியது. மலையடிவாரத்தில் நேற்று முன்தினம் பற்றிய தீ மளமளவென பரவி தொடர்ந்து எரிகிறது. இதன் காரணமாக இசபெல்லா ஏரிக்கரையோரம் அமைந்திருந்த ஏராளமான வீடுகளை நெருப்பு சூழ்ந்தது. அப்பகுதியில் வசித்த பொதுமக்கள் அவசரம் அவசரமாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.

காய்ந்துபோன புற்களில் தீப்பிடித்து மலைப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பகுதியை சாம்பலாக்கி உள்ளது. சுமார் 800 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மூலம் ரசாயன பொடிகளை தூவி, தீயை கட்டுக்குள் கொண்டு வர கடும் முயற்சி நடைபெறுகிறது. இதனால் கென் கவுண்டியில் அவசர நிலையை கவர்னர் பிரகடனம் செய்துள்ளார்.

காட்டுத்தீ வேகமாக பரவியதால் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ள நிலையில், மேலும் 3000 பேர் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகி உள்ளன. தீயில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும், சிலர் பலியாகியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தீயணைப்பு பணியில் ஈடுபட்ட மூன்று வீரர்களும் புகைமூட்டத்தில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY