ரஷ்ய வான்வழி தாக்குதல்: சிரியாவில் பொதுமக்கள் 31 பேர் பலி

0
97

201606252243330972_Russia-air-strikes-kill-31-civilians-in-east-Syria_SECVPFசிரியாவின் கிழக்கே ஜிகாதிகளின் பிடியில் உள்ள நகர் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்களில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டனர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சிரியாவின் டெய்ர் எஸ்சார் மாகாணம் எண்ணெய் வளமிக்கது. இங்குள்ள அல்-குரியா நகர் ஐ.எஸ். குழுவின் கட்டுக்குள் உள்ளது.

இதன் மீது ரஷ்ய படையினர் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளனர் என சிரியா நாட்டின் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பகம் கூறியுள்ளது.

இது பற்றி அதன் தலைவர் ரமி அப்தில் ரகுமான் கூறும்பொழுது, வேறு 16 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பொதுமக்களா அல்லது ஐ.எஸ். போராளிகளா என்பது உடனடியாக தெளிவாக தெரியவில்லை என கூறியுள்ளார்.

LEAVE A REPLY