உன்னிச்சைக் குளத்தில் நீராடச் சென்ற ஓட்டமாவடி இளைஞன் சகதிக்குள் மூழ்கி வபாத்

0
218

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

water deathமட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்திற்கு நண்பர்களாகச் சேர்ந்து நீராடச் சென்ற இளைஞர்கள் நால்வரில் ஒருவர் நீர்ச் சகதிக்குள் மூழ்கி மரணித்துள்ளதாக ஆயித்தியமலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (25) சனிக்கிழமை நண்பகல் நண்பர்களாகச் சேர்ந்து உன்னிச்சைக் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் சகதிக்குள் மூழ்கியுள்ளார்.

அங்கிருந்த ஏனையவர்கள் இந்த ஆபத்தை அறிந்து சகதிக்குள் மூழ்கியவரைக் கயிற்றைக் கட்டியிழுத்து கரைசேர்த்து கரடியனாறு மாவட்ட வைத்தியசாலைக்குச் சேர்ப்பித்த போதிலும் இடைவழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

ஓட்டமாவடி மீறாவோடையைச் சேர்ந்த நுபீர் முஹம்மத் இர்பாஸ் (வயது 22) என்பவரே மரணித்தவராகும்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

இச்சம்பவம் பற்றி ஆயித்தியமலைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY