காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

0
143

(எம்.எச்.எம். அன்வர்)

IMG-20160624-WA0048காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (24) இப்தார் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காத்தான்குடி அல்-மனார் அறிவியியற் கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்ற இந்நிகழ்வில் மீடியா போரத்தின் பதில் தலைவர் எம்.எப்.எம். பஸால் ஜிப்ரி தலைமையில் இடம்பெற்றது.

காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விஷேட சொற்பொழிவாளராக மௌலவி எம்.ஏ.எம். மசூத் அகமட் (ஹாசிமி) அவர்களால் மார்க்கச் சொற்பொழிவு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.வெதகெதர, போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, காத்தான்குடி மத்தியஸ்தர் சபைத் தலைவர் எம்.ஜ.எம். உசனார், காத்தான்குடி மின்சார சபையின் அத்தியட்சகர் எம்.எம். நௌபல், புனர்வாழ்வு மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சரின் காத்தான்குடிக்கான பொறுப்பதிகாரி எம்.எம். றுஸ்வின், திவிநெகும முகாமையாளர் ஏ.எல்.ஸெட். பஹ்மி மற்றும் தமிழ் ஊடக சகோதரர்கள், கல்விமான்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதிநிதிகள், காத்தான்குடி மீடியா போர உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

847d7a9e-1cc9-4b9d-83f6-41d8916e8420 b93031fb-898c-44d1-9608-c79f7ad49ca8 IMG-20160624-WA0045 - Copy - Copy IMG-20160624-WA0049 - Copy - Copy IMG-20160624-WA0052 - Copy - Copy

LEAVE A REPLY